நாடு திறக்கப்படுவது உறுதி? வகுக்கப்பட்டது புதிய உத்திகள்
கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்து வெளியேற சில உத்திகள் வகுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடக செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இந்த உத்திகள் என்னவென்பது எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், சட்டத்தின் மூலம் இவற்றை செய்வதை விட, இங்குள்ள ஆபத்து மற்றும் உண்மைத் தன்மையை மக்கள் புரிந்துகொண்டு போக்குவரத்து தடைகளை பாதுகாப்பதும் மிக முக்கியம்.
இல்லையென்றால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு செயல்முறை வெற்றி பெறாது என்றும் கூறினார்.
இதேவேளை, கண்காணிப்பு பணிகளுக்கு சுகாதார ஊழியர்களை நியமிக்க வேண்டாம் என்றும், பிற நிறுவனங்களும் இதை பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.