மீண்டும் ஐரோப்பாவில் வேகமாக பரவிவரும் கொரோனா…… WHO அதிருப்தி!!
கொரோனா வைரஸின் புதிய அலை ஐரோப்பாவில் மிக வேகமாக பரவிவருகின்றமை குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பாவில் கொரோனா தொற்றின் புதிய அலை மிகவும் வேகமாக பரவிவருகின்றது.
ஏற்கனவே ஒஸ்ரியா அரசாங்கம் நாட்டை முடக்கியுள்ளது.
அதேபோல்,
நெதர்லாந்து மூன்று வாரத்திற்கு பகுதியளவில் நாட்டை முடக்கியுள்ளது.
இந்த நிலையில் ஜேர்மனியில் தொடர்ந்தும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகின்ற நிலையில் பிரித்தானியாவிலும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் பிராந்தியத்தில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் ஐந்து லட்சம் பேர் கொரோனாவினால் மரணமடைவார்கள் என ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் கலாநிதி ஹான்ஸ் க்ளுகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலைக்கு நாடுகளின் தடுப்பூசித் திட்டம் முழுமை பெறாமை மற்றும் அதில் மக்கள் அக்கறை செலுத்தாமையே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனவே,
நாடுகள் நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மக்கள் முகக் கவசங்களை உரிய வகையில் பயன்படுத்த வேண்டும் எனவும் கலாநிதி ஹான்ஸ் க்ளுகே சுட்டிக்காட்டியுள்ளார்.