மீண்டும் இன்றுமுதல் ஆரம்பமானது பலாலி – சென்னை விமான சேவை!!
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று(12/12/2022) காலை மீண்டும் ஆரம்பமானதுடன்,
சென்னையில் இருந்து முதலாவது விமானம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
Alliance Air நிறுவனம் பலாலிக்கும் (Jaffna International Airport) சென்னைக்கும் இடையில் வாரம்தோறும் 04 விமானங்களை இயக்கவுள்ளது.
இந்த சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளமை மகிழ்ச்சியை தருவதோடு,
இந்த வாய்ப்பை பயன்படுத்தி எமது சுற்றுலாத்துறையின் வருமானத்தை அதிகரிக்க நாம் திட்டமிட்டு செயற்பட வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம் என இது தொடர்பான மேலதிக நன்மையாகும் பலரும் தமது கருத்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.