மீண்டும் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரிக்கப்படும்….. இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம்!!
நாட்டில் மீண்டும் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை தீவனப் பற்றாக்குறையால் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும்,
தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 1200 ரூபாவுக்கும் மேல் விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன்,
முட்டை ஒன்றின் விலை 47.50 ரூபா என்ற போதிலும்,
சில இடங்களில் 50 ரூபாவுக்கும் மேலதிகமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையை காணக்கூடியதாக உள்ளது.
இந்த நிலையில்,
எரிபொருள் நெருக்கடி, மூலப்பொருட்களுக்கான விலை உயர்வு போன்றவற்றின் காரணமாக
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையும் பாரியளவில் அதிகரிக்கும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.