இனி இராணுவத்தினற்றால் அரச காணிகளில் விவசாய நடவடிக்கைகள்…. புதிய இராணுவத் தளபதி!!
இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,
கைவிடப்பட்ட அரச காணிகளில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே தெரிவித்துள்ளார்.
அத்துடன்,
எந்த நேரத்திலும் மக்களுக்காக பணியாற்ற இராணுவம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே இன்று காலை கண்டிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன்,
தேரர்களை சந்தித்து ஆசிகளையும் பெற்றிருந்தார்.
இதன்போது,
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விகும் லியனகே இராணுவம் விவசாய நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலதிக படையினரை ஈடுபடுத்தி விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும்,
இது காலத்தின் தேவையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தில் அதிகமானோர் வருடாந்தம் ஓய்வு பெறுவதாக குறிப்பிட்ட இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே
இதற்கு சமனாக வெளிநாட்டு பயிற்சிகள் மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.