ஐந்து மாதங்களுக்குப் பின் முதன் முறையாக அவுஸ்திரேலியாவுக்குப் பறந்த இலங்கை விமானம்
ஐந்து மாதங்களுக்குப் பின் முதன் முறையாக, இலங்கை விமானம் இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு பறந்துள்ளது.
கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர் மெல்போர்ன் விமான நிலையத்திற்கு வெளிநாட்டு பயணிகளை ஏற்றிச் சென்ற முதல் இலங்கை விமானம் இதுவாகும்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் யு.எல் 604 இன்று காலை மெல்போர்ன் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இதேவேளை, ஜூலை 10ஆம் திகதிக்குப் பின் மெல்போர்னுக்கு வந்த முதல் சர்வதேச விமானம் இதுவாகும்.