அஜித் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியது உண்மையா….. குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்கள்!!
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏகே 62 படத்தில் நடிகர்கள் அரவிந்த சாமி மற்றும் சந்தானம் நடிக்கவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து, தயாரிப்பு நிறுவனத்திற்கு விக்னேஷ் சிவன் கதை பிடிக்காததால் அவர் ஏகே62 படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக ‘தடம்’, ‘மீகாமன்’, ‘கலகத்தலைவன்’ போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் செய்தி பரவி வந்தது. மேலும் ‘ஜஸ்டிஸ் ஃபார் விக்னேஷ் சிவன்’ (#JusticeforVigneshShivan) என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வந்தது.
இந்நிலையில் விக்னேஷ் சிவனின் செயல்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போது சமூக வலைதளத்தில் தன்னுடைய பயோவில் “ஏகே 62 இயக்குனர்” என்ற ஹேஸ்டேக் மற்றும் அஜித்தின் கவர் போட்டோவை விக்னேஷ் சிவன் நீக்கியுள்ளார். இதன் மூலம் அவர் அந்த படத்தில் இருந்து விலகியுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.