தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமில்லாமல் ஒரு தீவிர கார் பந்தய வீரராகவும் வல் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் அண்மையில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருந்தார் அதனைத்தொடர்ந்து முழுக்க முழுக்க கார் ரேசிங்கில் தனது கவனத்தைச் செலுத்தி வருகின்றார்.
கடந்த ஆண்டு முதல் கார் ரேசிங்கில் தீவிரமாகச் செயற்பட்டு வரும் அஜித்குமார் தனது ‘அஜித்குமார் ரேசிங்” எனும் சொந்த பந்தயய நிறுவனத்தை நிறுவி துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றுள்ளார். இந்நிலையில் “அஜித்குமார் ரேஸிங்” அணியின் அதிகாரபூர்வ எனர்ஜி பார்ட்னர் ஆக ரிலையன்ஸ் குழுமத்தின் “கெம்பா” குளிர்பான நிறுவனம் ஒப்பந்தம் ஆகியுள்ளது.
இந்த ஒப்பந்த அறிவிப்பில் “இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய மோட்டார் ஸ்போர்டட்ஸ் அணிகளில் ஒன்றான அஜித்குமார் ரேஸிங் அணி” என ரிலையன்ஸ் குழுமம் குறிப்பிட்டுள்ளது.
