அக்ஷய்குமார் படத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!!
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் புதிய படத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வந்தவர் அக்ஷய்குமார். இவர் நடித்துள்ள ‘சூர்யவன்ஷி’ இந்தி படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தை எதிர்த்து பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
ஹோஷியார்பூரில் சூர்யவன்ஷி படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டர் முன்னால் ஏராளமான விவசாயிகள் திரண்டு அக்ஷய்குமார் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கண்டன கோஷம் எழுப்பினர். சூர்யவன்ஷி படத்தின் போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். தியேட்டர் அலுவலகத்திற்கு சென்று படத்தை திரையிடக்கூடாது என்றும் வற்புறுத்தினார்கள்.
சூர்யவன்ஷி படம் திரையிடப்படுவதை எதிர்த்து பஞ்சாப்பில் உள்ள உதம் சிங் பூங்காவில் இருந்து திரையரங்கம் வரை கண்டன ஊர்வலத்தையும் விவசாயிகள் நடத்தினார்கள்.
வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நடிகர் அக்ஷய் குமார் திரைப்படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் ஹோஷியார்பூரில் சூர்யவன்ஷி திரைப்படம் திரையிட்ட 5 தியேட்டர்கள் முன்னால் திரண்டும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.