குழந்தையின் மூளைக்குள் “பிறக்காத இரட்டையரின் கரு”….. மருத்துவ உலகில் பாரிய அதிர்ச்சி!!
சீனாவில் ஒரு வயது குழந்தையின் மூளைக்குள் பிறக்காத இரட்டை குழந்தை கண்டெடுக்கப்பட்டது.
சீனாவில் உள்ள மருத்துவர்கள் ஒரு வயது குழந்தையின் மூளைக்குள் இருந்து “பிறக்காத இரட்டையரை” அகற்றியதாக தெரிவித்தனர்.
Neurology இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்த வழக்கு முன்வைக்கப்பட்டது.
குழந்தையின் தலை விரிவடைந்த நிலையில் மற்றும் உடல் இயக்க திறன்களில் (motor skills) சிக்கல்கள் இருப்பதாக அறியப்பட்டு, மருத்துவர்கள் ஸ்கேன் செய்துள்ளனர்.
அப்போது,
குழந்தையின் மூளைக்குள் அதன் ‘பிறக்காத இரட்டையரின்’ கரு இருப்பது வெளிப்பட்டது.
ஆதாவது,
தாயின் வயிற்றுக்குள் இரண்டு கரு உருவாகியுள்ளது.
ஆனால்,
அதில் ஒன்று வளரும்பொழுது மற்றோரு குழந்தையின் மூளைக்குள் அடைந்து
அதனுள்ளேயே சிறியதாக வளர்ந்து காணப்பட்டுள்ளது.
ஸ்கேனில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பிறக்காத இரட்டைக் குழந்தையின் கருவில் மேல் மூட்டுகள், எலும்புகள் மற்றும் விரல்கள் போன்ற மொட்டுகள் வளர்ந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கருவின் மரபணு வரிசைமுறையானது அது குழந்தையின் இரட்டைக் குழந்தை என்பதை வெளிப்படுத்தியதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிலைமைகள்,
கருவுக்குள் கரு (foetus-in-fetu) என கூறப்படுகிறது.
இது உயிருள்ள குழந்தையின் உடலுக்குள் கருவைப் போன்ற ஒரு திசு உருவாகும்போது பயன்படுத்தப்படும் மருத்துவச் சொல்லாகும்.
இதுபோன்ற வழக்குகள் உலகில் அரிதாகவே காணப்படுகின்றன.
மற்றும் 10 லட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படுகின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில்
பிறந்து 21 நாட்களே ஆண் குழந்தையின் வயிற்றில் இருந்து 8 கருக்களை மருத்துவர்கள் அகற்றினர்.