தொகுப்பாளராக களமிறங்கும் நடிகர் அர்ஜுன்???
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கும் அர்ஜுன், விரைவில் தொகுப்பாளராக களமிறங்க உள்ளாராம்.
சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான ‘சர்வைவர்’ நிகழ்ச்சி விரைவில் தமிழில் தொடங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் விதிப்படி, ஆளில்லாத தனித்தீவில் போட்டியாளர்களை தங்க வைத்து, அவர்களுக்கு விதவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்படும். அவை அனைத்தையும் வெற்றிகரமாக கடந்து இறுதிவரை தாக்குப்பிடிக்கும் போட்டியாளரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
இதில் வெற்றி பெறுபவருக்கு பெரும் தொகை பரிசாக வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது சாகச நிகழ்ச்சி என்பதால், அவர் இதற்கு பொருத்தமாக இருப்பார் எனக்கருதி அவரை ஒப்பந்தம் செய்ய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இது உறுதியானால் அவர் தொகுத்து வழங்கும் முதல் நிகழ்ச்சியாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.