காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு….. மேலும் இரு வருட காலாவதி எல்லை நீடிப்பு!!
காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்தில் வெளியிடப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க கூறியுள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகள் இல்லாமையால்
காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்து வழங்குவதில் சிக்கல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர்,
ஒரு வருடத்திற்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு வந்தநிலையில் தற்போது நீடிப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப் பத்திரங்கள் அச்சடிக்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில்
8 இலட்சம் அனுமதி பாத்திரங்கள் இன்னும் வழங்கப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளாந்தம் 500 முதல் 600 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.