அந்த 5 நாட்களை டார்கெட் செய்யும் மாஸ்டர்… அது ஓகே ஆச்சுனா வசூல் வேட்டை கன்பார்ம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படம் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இதனை திட்டவட்டமாக மறுத்த படக்குழு மாஸ்டர் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், மாஸ்டர் படத்தை வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம். ஜனவரி 14ம் தேதி வியாழக்கிழமை பொங்கல் பண்டிகை என்பதால், அதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது ஜனவரி 13ம் தேதி (புதன்கிழமை) வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறு வெளியிட்டால் புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என்று தொடர்ந்து 5 நாட்கள் மாஸ்டர் வசூல் வேட்டை நடத்தும் என்பதில் சந்தேகமில்லை.