“iPhone” இன் அடுத்த model குறித்து வெளியான தகவல்!!
iPhone இன் அடுத்த model குறித்து வெளியான இந்த தகவல் பயனர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Apple(ஆப்பிள்) நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் iPhone இல் புது புது மாற்றங்களை செய்து அறிமுகம் செய்து வருகிறது.
இந்நிலையில்,
அடுத்த iPhone model குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதன்படி ஆப்பிள் நிறுவனம் அடுத்ததாக மடிக்கக்கூடிய iPhone உருவாக்கி வருவதாக தகவல் கசிந்துள்ளது.
இந்த ஐபோன் டிசைனுக்கு “iPhone Air” என பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது உள்ள மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் ’Greece Line’ எனப்படும் மடிப்பு பகுதியில் தூசு சேர்ந்து போனின் செயல்திறனை பாதிக்கிறது.
இந்த பிரச்சனையை சரி செய்யும் வகையில் புதுவித டிசைனின் உதவியுடன் மடிக்கும் போனை ஆப்பிள் உருவாக்க உள்ளது.
மேலும்,
இந்த Phone முழுவதும் Waterproof தன்மை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
Apple Mobile அளவில் பெரிதாகி வருவதாக ஐபோன் ரசிகர்களிடையே வரும் புகாரையும் இந்த புதிய டிசைன் சரி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.