பராமரிப்பாளரை அடித்து தூக்கியது வெள்ளை புலி!!

இந்தியாவின் வண்டலூர் பூங்கா நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு விலங்குகளுக்கும் தனித்தனி பராமரிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

விலங்குகள் நடமாட்டம் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டு பராமரிப்பாளர்கள் உதவியுடன் விலங்குகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரிய வகையான வெள்ளை புலி இனம் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 6 வெள்ளை புலிகள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது.

 

இதில் நகுலன் என்ற பெயரிலான வெள்ளைப் புலி கடந்த சில நாட்களாகவே உணவு எடுத்துக்கொள்ளாமல் உடல்நலக் குறைவுடன் இருந்து வந்துள்ளது.

இதனையடுத்து,

பராமரிப்பாளர்கள் உடனடியாக நகுலன் என்ற புலியை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர் பராமரிப்பாளர் உதவியுடன் வெள்ளைப் புலியை கூண்டில் அடைத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக முயற்சி மேற்கொண்டனர்.

அப்பொழுது ஆசனவாய்ப் பகுதியில்

வெள்ளைப் புலிக்கு மாதிரி சேகரிக்க முயன்ற பொழுது சரிவர கூண்டின் தாழ் அடைக்கப்படாததால் புலி வெளியேறியது.

பராமரிப்பாளர் செல்லையாவை வெள்ளைப்புலி தாக்கியது.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட பூங்கா ஊழியர்கள் கூண்டை சரியான நேரத்தில் பூட்டியுள்ளனர்.

புலி தாக்கியதில் செல்லையா நிலை குலைந்து தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு பூங்கா ஊழியர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் .

 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்லையா வீடு திரும்பியதாக பூங்கா நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலங்கு பராமரிப்பாளரை வெள்ளைப்புலி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *