ஜெயம் ரவி படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யும் போனி கபூர்!!
பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் போனி கபூர், தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்ய முனைப்பு காட்டி வருகிறார்.
பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர், தற்போது தமிழில் அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தை தயாரித்து வருகிறார்.
இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும், ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கையும் தயாரிக்கும் போனி கபூர், தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்யவும் முனைப்பு காட்டி வருகிறார்.
அந்தவகையில், இவர் தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற ‘கோமாளி’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கைப்பற்றி உள்ளார்.
இதில் ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜுன் கபூர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் அர்ஜுன் கபூர், தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.