அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி….. கிடைத்தது முதற்கட்டமாக உதவித்தொகை!!
தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள 15 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கு மத்தியில் உண்மையான தகவல்கள் உறுதி செய்யபட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான பணத்தை திங்கட்கிழமை வங்கிகளில் வரவு வைப்பதற்கு நலன்புரி நன்மைகள் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி,
செவ்வாய்க்கிழமை(29/08/2023) முதல் பயனாளிகள் வங்கிகளில் பணத்தினை பெற முடியும் என தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ Twitter தளத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ Twitter பதிவை பார்வையிட இங்கே சொடக்குங்க்ள்…………………..
அரசாங்கம் புதிதாக நடைமுறைப்படுத்தியுள்ள அஸ்வெசும திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு திங்கட்கிழமை (28/08/2023) முதல் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் பயனாளிகளுக்கு முதற்கட்டமாக உதவித்தொகை வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
வங்கிகளில் கணக்கை ஆரம்பித்த பயனாளிகளுக்கு அரசு வங்கிகள் மூலம் பணம் வழங்கப்படும்.
நலன்புரி சபைத் தலைவராக இருந்த ஜி. விஜேரத்ன இராஜினாமா செய்ததால்
நிதி விடுவிப்பில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
எனினும்,
புதிய தலைவராக ஜயந்த விஜேரத்ன பதவியேற்றதையடுத்து பணம் விடுவிப்பது தொடர்பில் எழுந்திருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.