அதிகரிக்கும் ஆபத்து! நுவரெலியாவுக்கு யாரும் வருகைத்தர வேண்டாம்
நுவரெலியா மாவட்டத்தில் 298 தொற்றாளர்கள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதுடன் 572 குடும்பங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 9.00 மணிவரை வெளியான சுகாதார பிரிவினரின் தகவலின் அடிப்படையில் இதுவரையில் 298 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.572 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் நேற்று வலப்பனை சுகாதார பிரிவு பொது சுகாதார அதிகாரி ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இமேஸ் பிரதாப்சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் நுவரெலியா மாவட்டத்திற்கு ஏனைய மாவட்டங்களில் இருந்து வருகை தருகின்றவர்களுக்காக சுற்றுலா விடுதிகளோ சுற்றுலா இடங்களோ இன்னும் திறக்கப்படவில்லை எனவும் நுவரெலியாவிற்கு ஏனைய மாவட்டங்களில் இருந்து வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவிக்கின்றார்.
நுவரெலியா மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்றாளர்கள் இனம் காணப்படுவதன் காரணமாகவே சுற்றுலா பயணிகளை இங்கு வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.