அதிகரிக்கும் கொரோனா – முக்கிய அரச நிறுவனமொன்று வெளியிட்ட அறிவிப்பு!!
தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களின் சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே தபால் நிலையங்கள் மற்றும் உப அஞ்சலகங்கள் திறந்திருக்கும்.
தற்போதைய கொவிட் -19 தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும், ஈஎம்எஸ் மத்திய அஞ்சல் பரிமாற்றத்தால் நிகழ்த்தப்படும் சர்வதேச கூரியர் சேவை, ஸ்பீட் போஸ்ட் சேவை, வெளிநாட்டு பொதிகள் சேவை மற்றும் ஸ்டாம்ப் சீலிங் மெஷின் பிரிவு ஆகியவை வழக்கம் போல் செயல்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.