மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு 13 வயது பிள்ளையின் கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி!!
இரத்தினபுரி, ஹகமுவ பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு
தனது 13 வயது பிள்ளையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது நேற்றையதினம்(11/06/2022) இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேகநபரொருவரால் 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு தன்னை கொல்ல முயன்றபோது வீட்டில் இருந்த 13 வயது சிறுமி கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து சந்தேகநபரான தந்தை கொலை முயற்சியை கைவிட்டுள்ளார்.
சந்தேக நபர் பின்னர் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
காயமடைந்த தந்தையும், பிள்ளையும் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.