மதுபானக் கடைகள் மூடப்படுவதால் இலங்கை அரசுக்கு ஒரு நாளைக்கு 100 கோடி இழப்பு!!!!
மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படுவதனால் ஒரு நாளில் அரசாங்கம் நூறு கோடி ரூபாவினை இழப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நிதி அமைச்சு வட்டாரத் தகவல்களை ஆதாரம் காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கப்பெறும் நிறுவனங்களில் தேசிய இறைவரி திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களத்திற்கு அடுத்தபடியாக மதுவரித் திணைக்களத்தின் ஊடாக வருமானம் ஈட்டப்படுகின்றது.
நீண்ட நாட்களுக்கு மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் அரசாங்கத்திற்கு பாரியளவு நட்டம் ஏற்பட்டுள்ளது.
பயணத்தடை காலம் முடியும் வரையில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.