மட்டக்களப்பிலும் இறந்து கரையொதுங்கும் கடல்வாழ் உயிரினங்கள்!!
மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள் உட்பட 1 டொல்பின் மீனும் இன்று (19) கரையொதிங்கியுள்ளது.
இன்னும் பல ஆமைகள் கடலில் உயிரிழந்து வருவதாகதாக இன்று கடல் தொழிலுக்கு சென்று திரும்பிய மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 21 ஆம் திகதி X-Press Pearl கப்பலில் தீ பரவியதிலிருந்து இதுவரை 40 இற்கும் மேற்பட்ட கடலாமைகளின் உடல்களும் 05 டொல்ஃபின்களின் உடல்களும் கரையொதுங்கியுள்ளன.
கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், கடல் சுழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டதுடன், இறந்த நிலையில் கரையொதுங்கிய டொல்ஃபின் உள்ளிட்ட கடலாமைகளை பகுப்பாய்விற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.