அதிகவேகமாக பயணித்த சாரதி தன்னோட வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஒரு வீட்டோட முட்டுச்சுவரை (மதில்) உடைத்துக்கொண்டு வீட்டு வளவுக்குள் சென்று விபத்துக்குள்ளாக்கியுள்ளார். இந்த விபத்;துச்சம்பவமானது மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் நேற்றைய தினம் இரவு வேளையில் அரங்கேறியுள்ளது.
இந்த பிரதேசத்தில் மழையுடனான காலநிலை காணப்படும் நிலையில் இந்த விபத்தானது அரங்கேறியுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் தெரியயவருகையில் கல்முனை சாலை வழியே குருநாகலில் இருந்து மருதமுனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறியரக லொறி ஒன்று செட்டிபாளையம் பிரதான வீதியால் பயணிக்கும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் மதில் ஒன்றை உடைத்துக்கொண்டு வளவுக்குள் நுழைந்து விபத்துக்குள்ளாகியது.
மருதமுனை வெதுப்பகம் ஒன்றிற்கு சொந்தமான வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வாகனத்தில் இருவர் பயணித்துள்ளதுடன் அவர்களுக்கு எந்தவிதமான விபரீதமும் இடம்பெறவில்லை. வீட்டு மதில் மற்றும் வீட்டிலுள்ள சில உடமைகள் சேதமடைந்துள்ளதோடு லொறியின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

