மேலடுக்கு சுழற்சியில் வங்காள விரிகுடா….. மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு எச்சரிக்கை!!
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது கிடைத்து வரும் மழை செப்டம்பர் 5ஆம் திகதி வரை தொடர வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை குறித்து மேலும் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது மிகப் பரந்த பரப்பில் செல்வாக்கு செலுத்துவதன் காரணமாக மழை கிடைக்கும் போது செறிவான மழை கிடைக்கும் என்பதுடன் இடிமின்னலுக்கும் வாய்ப்புண்டு.
இந்த வளிமண்டல சுழற்சி அடுத்த சில தினங்களில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளையும் உள்ளடக்கி அரபிக்கடல் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே,
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளார்.,
இதேவேளை,
நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று(31/08/2022) இரவு முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்தனகலு, களு, களனி, ஜிங், நில்வலா மற்றும் மகாவலி ஆறுகளில் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக் கூடும் என குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய,
குறித்து அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,
நாட்டின் பல பகுதிகளில் இன்று(31/08/2022) மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களமும் தெரிவித்துள்ளது.
தெற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.