குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் எச்சரிக்கையாக இருங்கள் – ஐஸ்வர்யா ராஜேஷ்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு குறைய ஆரம்பித்துள்ளது. ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் தான் இந்த குறைவுக்கு காரணம்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது திரையுலக பிரபலங்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
நாம் எல்லோருக்கும் தெரியும் தற்போது கொரோனா இரண்டாவது அலையில் நாம் இருக்கின்றோம். முதல் அலையை விட இரண்டாவது அலை மிக அதிக நபர்களை பாதித்துள்ளது. குறிப்பாக ஆஸ்துமா உள்பட ஒருசில நோய்கள் உள்ளவர்களை அதிகமாக பாதித்து வருகிறது. எனவே தயவுசெய்து வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம். ஒருவேளை அவசர காரியமாக வெளியே வர வேண்டுமென்றால் 2 மாஸ்க் போட்டு கொள்ளுங்கள். அது மட்டுமின்றி கைகளை எப்போதும் சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். சானிடைசர் பயன்படுத்துங்கள்.
முக்கியமாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம், கொரோனாவை வெல்வோம். மக்களை காப்போம், நாட்டையும் காப்போம்’ என்று ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.