உருவ கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை!!
தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்த நடிகை, தனது உடல் எடையை பற்றி சமூக வலைத்தளத்தில் பேசுபவர்களுக்கு பதில் அளித்துள்ளார்.
மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை சனுஷா தமிழில் ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
ரேணிகுண்டா திரைப்படத்தில் வாய் பேச முடியாத இளம் பெண்ணாக நடித்த சனுஷாவின் நடிப்பு பலரையும் வெகுவாக கவர்ந்தது.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சானுஷா, தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வரும் நிலையில், இவரது உடல் எடையை வைத்து உருவ கேலி செய்தவர்களுக்கு தற்போது நடிகை சனுஷா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
“யாரெல்லாம் என் உடல் எடையைப் பற்றி என்னைவிட அதிகமாக கவலைப்படுகிறார்களோ அதைக்குறித்து பேசுகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று அவசியமில்லை. என்னை சுட்டிக் காட்டி பேசும் எல்லோரும் ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருவரை உங்களின் இரு விரல்களால் சுட்டிக்காட்டும்போது மீதமுள்ள மூன்று விரல்களும் உங்களை சுட்டிக்காட்டும் என்பதை மறந்து விடாதீர்கள். முதலில் உங்களை நீங்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சரி செய்து கொள்ளுங்கள் ” என தெரிவித்துள்ளார்.