5 Star Hote ஆகவுள்ள போகம்பர சிறைச்சாலை!!
போகம்பர சிறைச்சாலையை ஐந்து நட்சத்திர விடுதியாக மாற்றுவதற்கு தனியார் முதலீட்டாளர் ஒருவர் முன்வந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் தொன்மையைப் பாதுகாத்து அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
போகம்பர சிறைச்சாலையானது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு 2014 ஆம் ஆண்டு அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது.
அந்த அதிகாரசபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பெரிய கண்டி அபிவிருத்தித் திட்டம் மற்றும் கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இது மீள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
சிறைச்சாலையின் பிரதான கட்டிடம் காலனித்துவ கட்டிடக்கலையை பாதுகாத்து மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது
பொது மக்களுக்கான திறந்த மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுடன் கூடிய வளாகத்தின் பொருளாதார பெறுமதியை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கங்களாகும் என நகர அபிவிருத்தி அதிகார சபையின் மத்திய மாகாண பணிப்பாளர் இ.எம்.எஸ்.பி ஏகநாயக்க(E.MSB Ekanayake) கூறுகிறார்.
பிரதான சிறை வளாகம், வணிக வளாகம், உணவு நீதிமன்றம், அருங்காட்சியகம் மற்றும் சுற்றுலா விடுதிகளுடன் வணிக கட்டிடமாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட கண்டியில் உள்ள மூன்று மாடி போகம்பர சிறைச்சாலை இலங்கையின் இரண்டாவது பெரிய சிறைச்சாலையாகும்.
மேலும்,
இது ஒரே அடித்தளத்தில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிக நீளமான கட்டிடமாகும்.
138 ஆண்டுகள் செயல்பட்டு வந்த சிறைச்சாலை 2014ல் மூடப்பட்டது.