காதலன் பயிர்க் கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை….. காதலி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை!!
காதலன் தற்கொலை செய்து இறந்த சம்பவம் அறிந்த காதலி வீட்டில் தூக்கிட்டு தானும் தற்கொலை செய்துள்ள சம்பவம் இந்தியாவின் நெல்லை மாவட்டத்தை உலுக்கியுள்ளது.
இந்தியாவின் நெல்லை மாவட்டம், நாங்குநேரி அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்.
அவரது மகன் சுப்பையா (வயது 24).
அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்.
இவரது மகள் சுதா(வயது 22).
சுப்பையாவும், சுதாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தார்கள்.
ஆனால்,
சுப்பையாவிற்கு இரண்டு அண்ணன்கள் இருக்கும் நிலையில் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால்,
இரு வீட்டாரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சுப்பையா வீட்டில் இருந்த பயிர்க் கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்தார்.
இதனையறிந்த பெற்றோர் சுப்பையாவை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பையா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால்,
சுதாவின் பெற்றோர் துக்க வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தால் மனமுடைந்த சுதா வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் கதவுகளை உள்பக்கமாக தாழிட்டு தூக்கில் தொங்கி உள்ளார்.
சுதாவின் பெற்றோர் வந்து பார்த்ததில்
நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சுதாவின் தாய் அருகில் இருந்த ஜன்னல் வழியாக பார்த்த போது சுதா தூக்கில் தொங்கிய படி இருந்துள்ளார்.
இதனை பார்த்து அங்கு வந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று சுதாவின் உடலை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால்,
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விசாரணைகளை நாங்குநேரி காவல்துறையினர் நடத்தி வருகின்றனர் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.