அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து….. 31 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!
பிரித்தானியா செல்ல முற்பட்ட படகு நீரில் மூழ்கி 31 அகதிகள் வரையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்விபத்து தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிரான்சின் கடற்கரையில் இருந்து புறப்பட்ட இந்தப்படகானது இங்கிலாந்தை அடைய முயன்றபோது ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் அகதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன், எரித்திரியா, சாட், ஈராக், ஈரான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் இருந்து வந்த அகதிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறியப்படுகின்றது. இதனடிப்படையில் சட்ட விரோதமான முறையில் பிரித்தானியாவை அடைய முயலும் புலம்பெயர்ந்தோர் சம்பந்தப்பட்ட மிக மோசமான விபத்து இது என்று நம்பப்படுகின்றது.
இது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் குறித்த நிலைமைக்கு பதிலளிக்கும் வகையில் கோப்ரா அவசர குழுவின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என்று டவுனிங் ஸ்ட்ரீட் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்தில் குறைந்தது 30 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியும், திகைப்பும், ஆழ்ந்த வருத்தமும் அடைந்ததாக பிரதமர் மொரிச் ஜோன்சன் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ,
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து ஒரு மீட்புக் கப்பல் கலேஸ் துறைமுகத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கப்பலில் இறந்தவர்களில் சிலரின் உடல்கள் ஏற்றி வரப்பட்டுள்ளதாகவும் நம்பப்படுகின்றது.
மேலும் தெரியவருகையில்,
ஐந்து பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி பலியானதாகவும் அத்துடன் பலியானோரின் எண்ணிக்கை இப்போது 31 ஐ எட்டியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.