இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்
இலங்கையில் தமிழ் மக்களுக்கு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதுடன் நிரந்தர அமைதியை ஏற்படுத்த நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் முள்ளிவாய்க்காலில் நடந்த சோகமான துயரத்தை நினைவுகூரும் அனைவருக்கும் என ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர்கள் கூறியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு அனுஷ்டிப்பு வாரத்தை முன்னிட்டு கருத்து வெளியிடும் போதே அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையின் புதிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இணை அனுசரணை வழங்கி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இருந்து விலகியது. அத்துடன் கடந்த காலங்களில் நடந்த குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு பதவிகளை வழங்கியுள்ளதுடன் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் விசாரணை அதிகாரியை கைது செய்துள்ளது.