பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் உள்ள அனைத்து நாடுகளும் இன்று முதல் நீக்கம்!!
தற்போது சிவப்பு பட்டியலில் உள்ள அனைத்து நாடுகளையும் இன்று முதல் நீக்குவதாக பிரித்தானிய சுகாதார துறையின் செயலாளர் சஜிட் ஜாவிட் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் அச்சம் காரணமாக அங்கோலா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, தென் ஆபிரிக்கா, சிம்பாவே உள்ளிட்ட 11 நாடுகள் கடந்த நவம்பர் மாதத்தில் சிவப்பு பட்டியல் இணைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில்,
நாடாளுமன்றில் உரையாற்றிய சஜிட் ஜாவிட், குறித்த நாடுகளை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்குவதான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் உரையாற்றிய அவர்,
உலகம் முழுவதும் பரவிவரும் ஒமிக்ரோன் மாறுபாடு தற்போது பிரித்தானியாவில் சமூகப் பரவலடைந்து வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து ஒமிக்ரோன் மாறுபாட்டின் ஊடுருவலை கட்டுப்படுத்த பயணத் தடை குறைவான செயற்றிறனை கொண்டுள்ளது.
சிவப்பு பட்டியலில் இருந்து அனைத்து நாடுகளையும் நீக்கினாலும் வெளிநாட்டுப் பயணங்களுக்காக நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.