ப்ரோ, நீங்க ஒரு ஹீரோ… கிரிக்கெட் வீரரை பாராட்டிய சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரை பாராட்டி இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்ஸில் சதம் அடித்து 106 ரன்களில் ஆட்டமிழந்த அஸ்வின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் சமூக வலைதளத்தில் அஸ்வினை வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில்,
“ப்ரோ, நீங்க ஒரு ஹீரோ. இந்த களத்தில் சதம் என்பது பார்க்க அற்புதமாக இருந்தது. இப்படியே தொடருங்கள். உத்வேகம் தரக்கூடிய இன்னும் பல தருணங்களை உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று பதிவு செய்துள்ளார்.