வெளிநாடுகளிலிருக்கும் இலங்கையர் தமது உழைப்பின் ஒரு பகுதியை தாய்நாட்டுக்கு அனுப்பினால் எமது பொருளாதாரத்துக்கு அது மிகவும் பயனுடையதாக இருக்கும் ….. ஜீ.எல்.பீரிஸ்!!
வெளிநாடுகளிலிருக்கும் இலங்கையர் தமது உழைப்பின் ஒருபகுதியை நாட்டுக்கு அனுப்புமாறு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறு அனுப்பப்படும் ஒவ்வொரு டொலருக்கும் பெறுமதியை காட்டிலும் மேலதிகமாக இரண்டு ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இத்தாலியில் இடம்பெறும் நிகழ்வு ஒன்றிலேயே இதை குறிப்பிட்டார்.
“வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு தமது நாடுதான் அடையாளம். என்றாலும் வெளிநாடுகளுக்குச் சென்று நாட்டின் அரச தலைவரை விமர்சித்தல், கறுப்புக் கொடிகளை காண்பித்தல் உட்பட பல்வேறு விடயங்களை செய்வது அரசுக்கு எதிரானதாக அமையாது
வெளிநாடுகளிலிருந்துக்கொண்டு அரசியல் கட்சிகளுக்கோ அல்லது அரச தலைவர்களுக்கு எதிராகவோ மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயற்பாடுகளால் பாதிப்பு ஏற்படுவது நாட்டுக்கேயாகும்.
நாட்டில் பல்வேறு எதிர்பார்ப்புகளை கொண்டவர்கள் உள்ளனர். நாட்டை நாசமாக்கும் நோக்கமுடையவர்களும் இருக்கின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளை கொண்டு அவர்கள் நாட்டை பலமிழக்க செய்ய முற்படுகின்றனர்.
கொவிட்19 தொற்றுக்கு மத்தியிலும் நாடு பல்வேறு துறைகளில் வளரச்சியை காண்பித்துள்ளது.
அவ்வாறான சூழலில் நாட்டின் தலைவருக்கு எதிராக நாட்டில் அல்ல வெளிநாட்டில் இழுக்கை ஏற்படுத்துகின்றமை நல்ல விடயமல்ல.
வெளிநாடுகளில் இருப்பவர்கள் தமது உழைப்பின் ஒரு பகுதியை தாய்நாட்டுக்கு அனுப்பினால் எமது பொருளாதாரத்துக்கு அது மிகவும் பயனுடையதாக இருக்கும்.
நிதி அமைச்சும் திறைசேரியும் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அனுப்பப்படும் டொலர் ஒன்றுக்கு பெறுமதியை காட்டிலும் மேலதிகமாக 02 ரூபாவை செலுத்த முடிவுசெய்துள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.