தேரர்களின் வலியுறுத்தல்- தயாராகும் கோட்டாபய!!
#கொரோனாத் தொற்றும் மரணமும் அதிகரித்துச் செல்வதால் நாட்டை முடக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்த நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோட்டாபய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதோடு, விசேட உரையொன்றையும் நிகழ்த்த ஜனாதிபதி தயாராகிவருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் நேற்றும் இது தொடர்பாக வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்ற ஜனாதிபதி தயாராகி வருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.