அரச – தனியார் பேருந்துகளின் போட்டி ஓட்டம்….. புத்தூரில் முடிவுக்கு வந்தது!!
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற 750 வழி இலக்க
அரச மறறும் தனியார் பேருந்துகள்
ஒன்றுடன் ஒன்று மோதியதில் புத்தூர் – சிறப்பிட்டி இடைப்பட்ட புத்தூர் சோமஸ் ஸ்கந்த பாடசாலை அருகில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதும் ஏற்படவில்லை எனினும்
இரு பேருந்துகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (15/05/2023) காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.