டீசல் விலை அதிகரிப்பு – பேருந்து கடடனங்களில் எதிரொலி….. முழுமையான விபரங்கள்!!
டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும்
பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்கப்போவதில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் நேற்று(01/02/2024) இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிவிப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.
பேருந்துக் கட்டணத்தில் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளின் பிரகாரம் தற்போது கட்டணத்தை அதிகரிக்க முடியாது எனவும்
இதுவரையில் பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க எவரும் கோரிக்கை விடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,
நேற்றைய மற்றும் முன்னைய எரிபொருள் விலை திருத்தங்களை கருத்தில் கொண்டு,
தனியார் பேருந்து சங்கங்களுக்கு மொத்தமாக மொத்த நஷ்டத்தையும் ஏற்க முடியாது.
எனவே,
இம்முறை பெருந்துக் கட்டண திருத்தம் அவசியம் என லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதன்போது தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் எரிபொருள் விலை திருத்தங்கள் இடம்பெற்ற போது, பொறுப்பான பேருந்து சங்கங்கள் என்ற வகையில் தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின் படி நஷ்டத்தைச் சுமந்து கொண்டு செயற்பட்டோம்.
ஆனால்,
இம்முறை மொத்த நஷ்டத்தை ஏற்க முடியாது என்றும்
எங்களது நான்கு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி,
இந்தப் பேருந்துக் கட்டணத்தின் படி இது மூன்று வீத அதிகரிப்பாகும்.
மேலும்,
தேசிய பேருந்துக் கட்டணக் கொள்கையின் கட்டமைப்பிற்குள் பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க மேலும் ஒரு சதவீதம் தேவை என அவர் குறிப்பிட்டார்.
மேலும்,
புதிதாக விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரி மூலம் பாரிய பாதிப்பை நாம் அனுபவிக்கிறோம்.
விலைகள் நாங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
ஆனால்,
எங்களுக்கு சலுகை வழங்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உதிரிப்பாகங்கள், லூப்ரிகண்டுகள் மற்றும் சேவை கட்டணமும் அதிகரித்துள்ளது,” என்றார்.
இதனால்,
தற்காலிகமாக பேருந்து கட்டண அதிகரிப்பை நிறுத்தி வைத்திருப்பதாகவும் முன்மொழிவுகளுக்கான பதிலின் அடிப்படையிலேயே மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அதன் படி 10 வீதம் வரை கட்டணங்கள் உயர்வடைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.