வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளான “கெப் ரக வாகனம்” இருவர் பலி!!
கெப் ரக வாகனம் ஒன்று வீதியைவிட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துளளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளளனர்.
இச்சம்பவம் ஊவா பரணகம – அம்பகஸ்தோவ – பேரவெல்ல பிரதேசத்தில நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதன்போது வாகன சாரதி உட்பட அதில் பயணித்த மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் இருவரும், ஹக்கலை மற்றும் கலஹகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 36 வயதுடைவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.