கிறிஸ்மஸ் நிகழ்வுகளை இரத்து செய்யுமாறு வலியுறுத்து!!
கொவிட் தொற்றின் பிறழ்வான ஒமிக்ரோன் தொற்று உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருவதால் ஸ்கொட்லாந்தில் கிறிஸ்மஸ் நிகழ்வுகளை இரத்து செய்யுமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒமிக்ரோனால் ஏற்படும் பல தொற்றுப் பரவல், கிறிஸ்மஸ் விருந்துகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஸ்கொட்லாந்து பொது சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையிலேயே மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொது சுகாதார அறிவியல் பணிப்பாளர் டொக்டர் நிக் ஃபின் இதுகுறித்து கூறுகையில், ‘ திட்டங்களை ஒத்திவைப்பது நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.
நீங்கள் தடுப்பூசியைப் பெறுவது உங்கள் பூஸ்டரைப் பெறுவது நீங்கள் முகக்கவசங்களை அணிவது உங்களால் முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்வது பாதுகாப்பானது’ என தெரிவித்துள்ளார்.