கொடூரமாக handcuff மூலம் தன்னை தாக்கியதாக வாக்குமூலமளித்த சீவல் தொழிலாளி – ‘அவர் தானாகவே விழுந்ததில் காயம் ஏற்பட்டிருக்கலாம்’ என கூறும் போலீஸ்….. மன்னாரில் சம்பவம் (காணொளி இணைப்பு)!!
மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியில் சீவல் தொழிலாளி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், அடம்பன் பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியில் சீவல் தொழில் செய்து வரும் நிலையில் நேற்று முன்தினம்(02/05/2024) மாலை குறித்த நபரை அடம்பன் பொலிஸார் வீதியில் மறித்து விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர். சம்பந்தப்பட்ட நபர் காட்டு இறைச்சி விற்பதாக Read More