மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம்….. என இ.மி.ச மின்சார பொறியியலாளர்கள் சங்கம்!!

புதிய மின்சார சட்டத்தின் பல சரத்துகளை மாற்றாவிட்டால் மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம் என இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில்,

இடைநிறுத்தப்பட்ட மின் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கோரி இலங்கை மின்சார கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு உட்பட பல தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம்(31/01/2024) மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு மகஜர் ஒன்றை கையளிக்க சென்றிருந்த நிலையில் அவர்களின் மகஹரை ஏற்க யாரும் முன்வரவில்லை என தெரிவித்திருந்தார்.

அத்துடன்,Electrical Engineers Association said electricity charges may increase further

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தடை உத்தரவு இம்மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன்

நுகர்வோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கிறது.

இலங்கை மின்சார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சதுன் விதான முன்னிலையில் நேற்று(01/02/2024) பரிசீலிக்கப்பட்ட போதே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Electrical Engineers Association said electricity charges may increase further

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *