இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்….. மின்சார சபை பொறியலாளர்கள் சங்கம்!!
மின்சார சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டம் இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்வுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான சட்டமூலத்தை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கை மின்சக்தி திருத்தச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் பின்னர், நாளை நிறைவேற்றப்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த சட்டமூலத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம்,
போட்டி கொள்வனவு செயன்முறைக்கு வெளியே மின் உற்பத்தி திட்டங்களை செயற்படுத்துவதற்கான வாய்ப்பு கிட்டும் என சபையின் பொது முகாமையாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதன்மூலம்,
மக்களுக்கு நிவாரண விலையில் மின்சாரத்தை வழங்கும் செயற்றிட்டமும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சந்தையில் மின் அலகொன்றின் கொள்வனவு விலையை விட அதிக விலையில் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சட்டத்திருத்தம் மூலம் இந்த கொடுக்கல் – வாங்கல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்சார கொள்வனவின் போது போட்டிக்கு புறம்பாக நிறுவனங்களுக்கு காற்றாலை மின் திட்டங்களை வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அரசியல் காரணங்களுக்காக செயற்படும் மின்சார சபைத் தலைவரை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படாவிடின் இன்று நள்ளிரவு முதல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.