மின்தடை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்!!
மின்சாரத்தை தடையின்றி பெறுவதற்கு தேவையான அளவு மின்சார உற்பத்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.
இதன்படி,
எதிர்வரும் திங்கட்கிழமை வரை மின்தடை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும்,
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதில் நுகர்வோர் கவனம் செலுத்த வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.