“Chicken” பிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!!
கால்நடை தீவனத்தை இறக்குமதி செய்வதற்கு வெட் வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் (D.P. Herath) தெரிவித்துள்ளார்.
இதற்கமைய,
கால்நடை தீவன உற்பத்திக்காக சுமார் 100,000 மெட்ரிக்தொன் சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த இறக்குமதி மூலம் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய,
ரூ.25/- ஆக இருந்த முட்டையின் விலை ரூ.20/- ஆக வீழ்ச்சியடைவதுடன், கோழி இறைச்சியின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை,
முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான தேவையும் குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கத்தின் தலைவரான அஜித் எஸ்.குணசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.