மருத்துவரின் 12 வயது மகளுக்கு பைசர் தடுப்பூசி போட்ட சம்பவம் – புலனாய்வு பிரிவு எடுத்துள்ள நடவடிக்கை!!
சிலாபம் ஆரம்ப பாடசாலையில் உள்ள தடுப்பூசி மையத்தில் மருத்துவர் ஒருவரின் 12 வயது மகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணையை ஆரம்பித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியக இயக்குனர் வைத்தியர் ரஞ்சித் படுவந்துடாவ தெரிவித்துள்ளார்.
இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
சுகாதார அமைச்சின் புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இதில் ஏதேனும் தவறு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
புலனாய்வுப் பிரிவானது இந்த அறிக்கையை விரைவில் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் சமர்ப்பிக்கும். இதேவேளை, இராஜாங்க அமைச்சர்கள், சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் ஆகியோர் நிலைமையை கண்காணித்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, மாகாண பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் போது தடுப்பூசி பெற மாகாணம் விட்டு மாகாணம் செல்வது சரியான செயல் அல்ல என்றும் அவர் கூறினார்.