தைவானுக்குன் ஆயுத்தகங்கள் விற்க ஒப்பந்தம் போட்டதனால் அமெரிக்காவின், 20 நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது. சீனாவானது அதன் அருகே உள்ள தைவானை சொந்தம் கொண்டாடி வருகிறது ,இதற்க்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது . இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சனை நீடிக்கிறது . இந் நிலையில் , சீனாவின் எதிர்ப்பை மீறி . 99,822 கோடி ருபாய் மதிப்பில் தைவானுக்கு ஆயுத்தங்கள் விற்க அமெரிவ ஒப்பந்தம் போட்டது ஆத்திரமடிந்த சீன அரசு அமெரிக்காவில் உள்ள ஆயுத தயாரிப்பு மற்றும் பாதுகாப்து சார்ந்த 20 நிறுவனங்களுக்கு அதிரடியாக தடையை விதித்துள்ளது. அத்துடன் , அந்நிறுவனங்களை சார்ந்த 10 உயரதிகாரிகளுக்கும் தடையை விதித்துள்ளது.
சீன வெளியுறவு துறை வெளியிட்ட அறிக்கையில்,’தைவான் பிரச்சனையில் ஆத்திரமூட்டும் செயல்களை செய்ய முயட்சிக்கும் எவருக்கும் தக்க பதிலடி வழங்கப்படும் என்றும் ஒரே சீன என்ற கொள்கையை அமெரிக்கா கடைபிடிக்க வேண்டும் .தைவானுக்கு ஆயுதங்கள் வழங்கும் அபத்தான நடவடிக்கையை நிறுத்த வேண்டும்’ என்றும் , குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது தடை செய்யப்பட்டுள்ள 20 நிறுவங்களில் பெரும்பலானவை சீனாவுடன் வர்த்தகம் செய்யவில்லை , எனவே இந்த தடை என்பது அமெரிக்காவிற்க்கு எச்சரிக்கையாக கருதப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
