சீனாவின் தடுப்பூசிக்கு கிடைத்தது அனுமதி -இலங்கை மக்களுக்கும் அடுத்தவாரம் முதல் செலுத்தப்படுகிறது
அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோம் கொவிட் தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது
WHO தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் வாரங்கள் அல்லது மாதங்களில் ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் கோவாக்ஸ் திட்டத்தில் சினோபார்ம் தடுப்பூசி சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.
மேலும் யுனிசெஃப் மற்றும் அமெரிக்காவின் WHO இன் பிராந்திய அலுவலகம் மூலம் விநியோகிக்கப்படுகிறது.
இதேவேளை சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசி அடுத்த வாரம் முதல் இலங்கை மக்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் அதிகம் பதிவாகும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை தேர்ந்தெடுத்து குறித்த மக்களுக்கு தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
சீன அரசாங்கத்தால் இந்நாட்டிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளின் ஒரு பகுதி இந்நாட்டில் வசிக்கும் சீனர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது