மண்டபங்கள், திரையரங்குகளிற்கு புதிய சுகாதார வழிகாட்டல்கள்….. ஓரளவு மகிழ்ச்சியில் அனைவரும்!!
இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைமுறைக்கு வரும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவால் இந்தப் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில்,
திருமண மண்டபத்தின் கொள்ளவில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமல் அதிகபட்சமாக 200 விருந்தினர்கள் கலந்து கொள்ளலாம் எனவும், வெளிப்புற திருமண வைபவங்களில் 250 பேர் வரை கலந்து கொள்ளலாம் எனவும் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில்,
திரையரங்குகளில் ஒரு காட்சிக்கு இருக்கை எண்ணிக்கையில் 75% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும்,
அலுவலகம் மற்றும் தொழில்முறை சந்திப்புகளில் 150 பேர் மட்டுமே பங்குபற்ற முடியும் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.