கொழும்பில் 18 வயது மாணவி மாயம்!!
கொழும்பு – பம்பலபிட்டி மகளிர் பாடசாலையில் கல்வி பயிலும் 18 வயதான மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கல்கிஸ்ஸை − பீரிஸ் வீதியைச் சேர்ந்த மாணவி ஒருவரே காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பில் காவல் நிலையத்தில் பெற்றோரால் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாணவி கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.