கொழும்பு மாவட்ட மக்கள் தொடர்பில் வெளியான தகவல்!!
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 150,000 பேர் இதுவரை COVID-19 தடுப்பூசியை போடவில்லை என கொழும்புமாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தின் 557 கிராம அலுவலர் பிரிவுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இந்த தகவல் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார். 30 முதல் 59 வயதிற்குட்பட்ட 99,373 பேர் தடுப்பூசியை ஏற்றவில்லை.அதேபோன்று 60 வயதுக்கு மேற்பட்ட 46,600 முதியவர்கள் தடுப்பூசியை எடுக்கவில்லை.
தடுப்பூசி போடப்படாத இவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். தடுப்பூசி போடாத நபர்களை அடையாளம் கண்டு தடுப்பூசி போடுவதற்கு பொலிசார் கடந்த வாரம் நடவடிக்கையைத் தொடங்கினர்.
60 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி போடப்படாதவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மற்றும் கொலன்னாவ பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.