கொழும்பு துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் கொள்கலன்கள்….. காரணம் டொலர் தட்டுப்பாடு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக சுமார் 100 சீனி கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது சந்தையில் சீனிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், சீனி இருப்பு உள்ள கடைகளில் கூட, ஒரு கிலோ, 155 முதல், 160 ரூபாய் வரை, கட்டுப்பாட்டு விலைக்கு மேல் விற்கப்படுகிறது.

சீனி கொள்கலன்கள் மாத்திரமன்றி ஆயிரக்கணக்கான மெற்றிக் தொன் பொருட்களை உள்ளடக்கிய சுமார் 500 கொள்கலன்கள் தற்போது துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாகவும் இது ஒரு பெரிய குழுவிற்கு சொந்தமானது என்றும் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன(Nihal Seneviratne) தெரிவித்தார்

சீனி கொள்கலன்கள் துறைமுகத்தில் சிக்கியுள்ளதால், இறக்குமதியாளர்களிடம் சீனி இருப்பு இல்லை எனவும், சீனியை பதுக்கி வைத்திருந்தவர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கருதலாம் எனவும் செனவிரத்ன தெரிவித்தார்.

இதற்கு முன்னர் வழமை போன்று வர்த்தக வங்கிகள் டொலர்களை வழங்கியிருந்தால் நாளாந்தம் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருக்கும் எனவும் டொலர் தட்டுப்பாடு அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் செனவிரத்ன மேலும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *